செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசியை பெற்றமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் சான்றிதழ் செப்டம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – செப்டம்பர் முதல் வாரத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75 வீதமானோர் இரண்டாவது டோஸைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டின் தடுப்பூசி திட்டத்தின் சூழ்நிலையின் அடிப்படையில் டிஜிட்டல் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
யாழ்ப்பாணத்தில் ரூ.400 மில்லியன் செலவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு!
கட்டணங்களை குறையாது - முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் !
அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது சாத்தியமாகுமா? - வைத்திய நிபுணர்...
|
|