செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2 தடுப்பூசிகளையும் செலுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நம்பிக்கை!
Wednesday, August 4th, 2021எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஔடத கட்டுப்பாடுகள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது தடுப்பூசியை ஏற்ற முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேநேரம் முதலாவது தடுபூசி ஏற்றி 4 வாரங்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஏற்ற வேண்டும் என்ற நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய தாம் இந்த எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர், 18 வயது தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசியை ஏற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் மாதமளவில் 18 -30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கான முதலாவது தடுப்பூசியை ஏற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|