செனகல் பாதுகாப்பு ஆலோசகர்- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

இலங்கை மற்றும் புதுடில்லிக்கான செனகல் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மாலிக் தியாவ்; பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் இருவருக்குமிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் நெவில் வீரசிங்க கலந்துகொண்டார்
Related posts:
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை கோருகிறது யாழ் மாவ...
மொடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கும் பயன்படுத்தலாம் - ஐரோப்பிய ஔடத முகவரகம் பரிந்துரை!
நாட்டின் சுற்றுலா வலயங்களிலுள்ள அனைத்து வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னா...
|
|