சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு!

Friday, February 18th, 2022

சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் லன்ஞ்ஷீட்கள் போன்ற உக்கலடையாத உற்பத்திகளை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு அண்மையில் தீர்மானம் எடுத்தது.

அதற்கமைய சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து சூழலுக்கு உகந்த உற்பத்திகளை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கும் வகையில் வர்த்தகத்துறை அமைச்சு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: