சூழலியலாளர்களை தூண்டி மக்களை குழப்புகின்றன அரசசார்பற்ற நிறுவனங்கள் – அமைச்சர் சமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

Sunday, April 4th, 2021

அரசாங்கம் நீர் நிலைகளை அமைத்து அதற்கு அருகில் உள்ள காணிகளில் மக்களின் நன்மைக்காக அபிவிருத்திகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள நிலையில் சூழலியலாளர்களுக்கு அரச சார்பற்ற நிறுவகங்கள் பணம் கொடுத்து மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சமர் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

“மஹிந்த சிந்தனையின் பிரகாரம் ரம்புகன் ஓயா தீர்த்தேக்கத்தை நாம் உருவாக்கினோம். தற்போது அங்கு காணி உள்ளது. அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதனைதான் தற்போது சூழலியலாளர்கள் எதிர்கின்றனர்.

இவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் கைக்கூலிகள். நாம் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்தும் அவர்களுக்கு பணம் வரும் விதம் குறித்தும் அவர்களின் நோக்கம் குறித்தும் தேடி வருகிறோம். பல தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. பணம் கொடுத்து மக்களை உசுப்பேற்றி விடுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள இமைச்சர் சமல் ராஜபக்ச குளம் அமைத்து அதற்கு அருகில் உள்ள காணியை அபிவிருத்தி செய்யாவிட்டால் அதன்மூலம் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை” என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையில் ஏழை குழந்தைகள் அதிகளவு ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர் - யுனிசெப்!
உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் விஷேட குழு நியமன...
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்...