சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ஈழமக்கள் ஜனநாயக கட்சி நடவடிக்கை!

நேற்றைய தினம் இளவாலைப்பகுதியில் திடீரென வீசிய புயல் காற்றின் தாக்குதலுக்கு இலக்கான பகுதிகளின் பாதிப்புகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில்சென்று பார்வையிட்டதுடன் அழிவடைந்த கட்டிடங்களையும் மரங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துறைசார் அதிகாரிகள் ஊடாக மேற்கொண்டுள்ளனர்.
சூறாவளியுடன் கூடிய மழையினால் பல கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. குறிப்பாக இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், புனித கென்றியரசர் கல்லூரி, சென்ஜேம்ஸ் யாகப்பர் ஆலயம் போன்ற பகுதிகள் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலையை இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கு அமைய கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) வலி.தென்மேற்கு நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் (ஜீவா) ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர். மேலும் செயலாளர் நாயகத்துடன் தொலைபேசியூடாக குறித்த பாடசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது சேதமடைந்த கட்டிடங்களை அகற்றி மீளவும் அவற்றை இயல்பு நிலைமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை குறித்த பகுதி துறைசார் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அவற்றிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|