சூரிய சக்தி மின் உற்பத்தி வேலைத்திட்டம் ரணமயுர பிரதேசத்தில் ஆரம்பம்!
Saturday, January 21st, 2017சூரிய சக்தி மின் உற்பத்தி வேலைத்திட்டம் ஹம்பாந்தோட்டை, ரணமயுர பிரதேசத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக இந்திகழ்வில் கலந்து கொண்டிருந்த மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இந்த திட்டத்தை இலங்கை நிலைபெறுமகு வலு அதிகாரசபை, தனியார் துறையினருடன் இணைந்து முன்னெடுக்கின்றது.
06 மாத காலம் வறட்சியான நிலமை ஏற்பட்டாலும் இந்த திட்டத்தின் ஊடாக மின்சாரத்தை தொடர்ந்து வழங்க முடியும் என்று அமைச்சர் இங்கு கூறினார். இலங்கை நிலைபெறுமகு வலு அதிகாரசபை, தனியார் துறையினரின் பங்களிப்புடன் 10 மெகாவோல்ட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட உள்ளது.
Related posts:
டிஜிட்டல் மயமாகிறது 300 அரச வைத்தியசாலைகள்!
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் - இராணுவத் தளபதி!
நிதிப் பற்றாக்குறை - நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ...
|
|