சுவீகரித்த வயல் காணிகளை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வன பாதுகாப்புத் திணைக்களத்துக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வயல் காணிகளை பயிர்ச் செய்கைகளுக்காக விரைவாக விவசாயிகளுக்கு விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான பணிப்புரைகளை கமத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்துக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அடுத்த மாதம் முதல் யூரியா உரம் பத்தாயிரம் ரூபாவுக்கு விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளதுடன் அவர்களின் வேண்டுகோள்களையும் அமைச்சர் அதன்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வயல் காணிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு பெற்றுத் தருமாறும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: