சுவிஸ் ஊடகங்களிலும் வித்தியா படுகொலை செய்தி!
Saturday, September 30th, 2017வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஊடகங்கள் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.
வித்தியா கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியாக சுவிஸ்குமார் உள்ளார். அவர் குறித்து சுவிட்சர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கையில் பிறந்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.கூட்டு பாலியல் வன்புணர்வுடன் தொடர்புபட்ட சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்தவர் உட்பட 7 பேருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களின் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ். மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு நியாயமான தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.2015ஆம் ஆண்டு மே மாதம் 17 வயதுடைய பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, அது காணொளியாக பதிவிடப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துடன் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த மகாலிங்கம் சசிகுமாரும் (சுவிஸ் குமார்) தொடர்புப்பட்டுள்ளார்.மூன்று நீதிபதிகளினால் சசிகுமார் மற்றும் 6 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 7 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.வித்தியா கொலை வழக்கில் இலங்கை பொலிஸார் மென்மையாக போக்கினை கடைப்பிடித்தனர். இதில் பிரதான சூத்திரதாரியான சசிகுமார் சுவிட்சர்லாந்து தப்பிச் செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டார்.இதன்மூலம் வித்தியா கொலை வழக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்ததாக சுவிஸ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
|
|