சுவரொட்டியொட்டுவோர் கைது செய்யப்படுவர் – மஹிந்த தேசபிரிய!

தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் –
“சுவரொட்டிகள் ஒட்டுவோரை பின்தொடர்ந்து சென்று கைது செய்வது இலகுவான காரியம் அல்ல. கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் கைதுகள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால் தற்போது வழங்கப்படும் பொலிஸ் பிணை இரத்து செய்யப்படுமெனவும் அவர்கள் விளக்கமறியலில் அடைக்கப்படுவார்கள் எனவும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் சுவரொட்டிகளை ஒட்டுவது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கவேண்டிய கடமை பொதுமக்களுக்கு இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுவரொட்டிகளை ஒட்டுவோர் தொடர்பில் உரிய ஆதரத்துடன் பொலிசாருக்கோ எமக்கோ அனுப்பி வைத்தால் நாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல் அலுவலகங்களை அகற்றுவது தொடர்பிலும் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது எதிர் வரும் 31 ஆம் திகதிவரை அரசியல் அலுவலகங்களை அகற்ற வேண்டாம் எனவும் 7 ஆம் திகதிவரை அதனை அனுமதிக்கமாறும் அரசியற்கட்சிகள் கோரிக்ககை விடுத்ததாகவும் இத தொடர்பாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் ஆராய்ந்த முடிவெடுப்பதாக அவர் மேலும் கூறினார்.
Related posts:
|
|