சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி வல்லுறவுக்குட்படுத்தப் படவில்லை – மருத்துவ அறிக்கையில் தகவல்!
Tuesday, June 26th, 2018யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் சிவநேஸ்வரன் றெஜினா என்ற 6 வயதுடைய பாடசாலை மாணவி கழுத்தில் கயிற்றினால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 26 யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது சிறுமியின் கழுற்றில் கயிற்றினால் நெறிக்கப்பட்ட தடயம் காணப்படுவதுடன் சிறுமி எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நான்குபேர் நேற்று வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
|
|