சுழிபுரத்தில் கோரூரம் – 6 வயது சிறுமி கழுத்து நெரித்து படுகொலை!
Monday, June 25th, 2018வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 6 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
.இன்று பிற்பகல் காணாமல்போனதாக கூறப்படும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என குறித்த சம்பவவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தகவல் தெரிவித்தனர்
வெளியே சென்றிருந்த அவரின் தாய் பிற்பகல் 3மணியளவில் வீடு திரும்பியபோது மகளைக் காணவில்லை தெரிவித்தாகவம் இதையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சிறுமி சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளம் காணப்படுவதாகவும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
டெங்கு ஒழிப்பை கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி !
சட்டத்திற்கு முரணாக வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை!
நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு!
|
|