சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய சிறந்த முதல் 25 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்தது!

Friday, September 10th, 2021

பிரபல ‘ட்ரவல் ப்ளஸ் லெஷர்’ சுற்றுலா வழிகாட்டி சஞ்சிகையானது, உலகில் சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய முதல் 25 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் பெயரிட்டுள்ளது.

அமெரிக்காவின் மெரிடித் ஊடக குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த சஞ்சிகையில், புதிய சுற்றுலா வலயங்களின் பட்டியலில்  இலங்கை 24 ஆவது இடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இலங்கை மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் ஒரே இடத்தை பிடித்துள்ளன.

சுற்றுலாப் பயணிகளிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ட்ரவல் ப்ளஸ் சஞ்சிகையானது, இவ்வருடத்துக்கான சிறந்த சுற்றுலா தளங்களை தேர்தெடுத்தெடுப்பதற்கு, கடந்த ஜனவரி 11 ஆம் திகதிமுதல் மே 10 ஆம் திகதிவரை இந்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: