சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பிலிருந்த பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!.
Tuesday, March 26th, 2024சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி ஏப்ரல் 5 ஆம் திகதிமுதல் நானு ஓயாவில் இருந்து பதுளைவரை விசேட பெட்டியுடன் கூடிய புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு புகையிரதமும் மற்றும் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஒரு புகையிரதமும் இயக்கப்படுமெனவும், குறுகிய தூர சுற்றுலாப் பயணிகளுக்காக மற்றுமொரு புகையிரதமும் நானுஓயிலிருந்து பதுளைக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முல்லைத்தீவில் 1,958 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி!
ஒரு பகுதியினரின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது - அரசாங்கம் !
எமது அரசாங்கத்தின் தலைவர் மத்திய வங்கியில் பணத்தை திருடவில்லை - ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவே உழைக்...
|
|