சுற்றுலா பயணிகளுக்கு தனியான முச்சக்கர வண்டி சேவை!

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தனியாக முச்சக்கர வண்டி சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா போக்குவரத்து சேவைக்காக முச்சக்கர வண்டி மற்றும் சாரதிகள் பதிவு செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு விசேட பயிற்சி ஒன்று வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சாரதிகளை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சீருடை வழங்கப்படவுள்ளதோடு, பாதுகாப்பாக முச்சக்கர வண்டி ஓட்டுவது குறித்து விதிமுறைகள் வழங்கப்படவுள்ளது. அதற்கு மேலதிகமாக ஆங்கில மொழி தொடர்பில் பயிற்சி ஒன்று வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா போக்குவரத்து சேவைக்காக பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களில் விருப்பமானவர்களுக்காக சிறிய அளவிலான மோட்டார் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு உதவி செய்ய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|