சுற்றுலா பயணிகளின் பேருந்து விபத்து : 18 பேர் காயம்!

Thursday, January 5th, 2017

நேபாளத்திலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

நேற்று (04) பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொத்மலை மகாவலிசாய விகாரையை தரிசித்துவிட்டு கம்பளை நோக்கிச் செல்லும் போது கொத்மலை அணைக்கட்டு பிரதேசத்தில், பஸ் பாதையை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸில் சுற்றுலா பயணிகள் 23 பேரும் சாரதி ஒருவரும் பஸ் நடத்துனர் ஒருவருமாக  25 பேர் இருந்துள்ளனர்.காயமடைந்த 18 பேரில் 5 நேபாள பிக்குகளும் ஒரு வியட்நாம் பிக்கும் 09 பெண்களும் 03 ஆண்களும் அடங்குகின்றனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Nepal Tourist Bus Accident-3-750x366

Related posts: