சுற்றுலாப் பிரதேசங்களை விரிவான திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
Saturday, December 17th, 2022எல்ல சுற்றுலாப் பிரதேசத்தை விரிவான திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுலா, நகர அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுகளுடன் இணைந்து நான்கு மாதங்களுக்குள் அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
எல்ல வர்த்தகர் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
எல்ல சுற்றுலா வலயத்தை உத்தியோகபூர்வமாக திட்டமிட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலா தலங்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிர்மாண நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
முதற்கட்டமாக எல்ல சுற்றுலா வலயம் முறையான திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு ஊவா மாகாணத்தை சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|