சுற்றுலாப் பயணிகள் மூலம்  43 மில்லியன் வருமானம்!

Sunday, May 15th, 2016

கடந்த ஏப்ரல் மாத வசந்த காலத்தில் கண்டி பேராதனை இயற்கை தாவரவியல் பூங்காவை பார்வையிட 3,29,744 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இச்சுற்றுலா பயணிகளின் மூலம் இப்பூங்காவிற்கு 43 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத வசந்த காலத்தில் இப்பூங்காவிற்கு 3,00,250 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் 29,494 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related posts: