சுற்றுலாப் பயணிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை !

Thursday, March 26th, 2020

இலங்கையில் தங்கியிருக்கும் வெளி நாட்டு சுற்றலாப் பயணிகளை அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 1912 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொறோனா தொற்று காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்கும் அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 18,093 சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர விடுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக முடங்கியிருக்கின்றனர்.

எனவே, அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் இலங்கை சுற்றுலா அதிகார சபையினால் மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: