சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு – வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

கலாச்சாரத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் கண்டி, போகம்பறை சிறைச்சாலை வளாகம் புனரமைக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி, போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மிக பழமைவாய்ந்த போகம்பறை சிறைச்சாலையின் புனரமைப்பு பணிகள் குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம்; கண்டியில் தங்கியிருக்கக்கூடியவகையில் சுற்றுலா அபிவிருத்திட்டங்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கண்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஓரிரு தினங்கள் மட்டுமே கண்டி விடுதிகளில் தங்கி வெளியேறுகின்றனர். இந்த நிலையை மாற்றி கண்டி கிராமங்களில் உள்ள சுற்றுலா இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்குமிடையில் நீண்ட காலதொடர்புகள் இருக்கக்கூடிய பரிவர்த்தனை இடமாக போகம்பறை சிறைச்சாலை புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|