சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் விசா – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விசா அனுமதி வழங்கும் செயன்முறையின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கைத்தொலைபேசி செயலியை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் விசா வழங்கப்படவுள்ளது.
இதற்காக சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 70 அமெரிக்க டொலர்களும், சார்க் அல்லாத நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 85 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படவுள்ளது.
அத்துடன், சிங்கப்பூர், மாலைதீவு, மற்றும் சீஷெல்ஸ் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|