சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு: நாடு பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடும் – சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, April 26th, 2021

நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதை வரையறுப்பது தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இதுதொர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ,சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமைவாக கொரோனா வைரசு தொற்று பரவலுக்கு மத்தியிலும் , விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பன தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, நாட்டிற்கு வரும் பயணிகளின் மூலம் கொரோனா தொற்று சமூகத்திற்கு பரவாது தடுக்கப்படுகிறது. சுற்றுலாத்துறையை கொண்டு நடத்துவதற்கு கொரோனா கட்டுப்பாடு அவசியமாகும். சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தால், நாடு பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அமைச்சர்  தெரிவித்தார்.

கொரோனா வைரசு தொற்றின் அனர்த்தம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்ட போதிலும் பொது மக்கள் இதனை கருத்திற்கொள்ளாது கடந்த புத்தாண்டு காலப்பகுதியல் செயல்பட்டனர். இதன் தாக்கத்தை பொதுமக்கள் தற்போது காணுகின்றனர் என்றும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: