சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Friday, February 3rd, 20232023 ஜனவரியில் 1,00, ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதிமுதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,02,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி 2022 இல் பதிவாகிய 82 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 20,218 சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தந்துள்ளனர்.
இதனடிப்படையில் ரஷ்யாவிலிருந்து 25 ஆயிரத்து 254 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 13 ஆயிரத்து 759 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8 ஆயிரத்து 483 பேரும் வருகை தந்துள்ளனர்.
ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, மாலைதீவு மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஜனவரி மாதத்துக்கான மீதமுள்ள மூல சந்தைகளாகுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|