சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – சுற்றுலா அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

ஒகஸ்ட் மாதத்தில் கொரோனோ கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டதன் காரணமாக, இலங்கைக்கு தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுற்றுலா அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஜனவரிமுதல் இன்று வரை சுமார் 150 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 200 ஆயிரம் வருகையை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், ஆண்டின் இறுதியில் (2021) குறைந்தபட்சம் 175 ஆயிரம்முதல் 185 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளின் வருகை எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிய பிராந்திய பேரவை 300 மில்லியன் டொலர் நிதி உதவி!
8 லட்சம் பேர் தற்கொலை - அதிர்ச்சியில் சுகாதார நிறுவனம்!
நாடு முடக்கப்படாது – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!
|
|