சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலாத்துறைத் திணைக்களம்!

Tuesday, July 10th, 2018

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக துறைசார் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுன் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 19 வீதம் அதிகரிப்பாகும்.

ஜுன் மாதம் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 828 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருக்கின்றனர். அவர்களில் நூற்றுக்கு 98 வீதமானோர் விமானம் மூலமே இலங்கைக்கு வந்திருக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜுன் மாதம் வரை நாட்டில் 11 இலட்சத்து 64 ஆயிரத்து 647 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருக்கின்றனர். அது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 15.3 வீத வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது.

ஜுன் மாதம் நாட்டில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஆசிய பசுபிக் எல்லையில் இருந்தே வந்திருக்கின்றனர். 58 வீதமானோர் அங்கிருந்தே வந்திருக்கின்றனர்.

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நூற்றுக்கு 28 வீதம். அமெரிக்காவில் இருந்து 7 வீதமும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 6 வீதமும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருக்கின்றனர் என்று திணைக்களம் தெரிவித்தது

Related posts:


யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில்  27 இளைஞர்க...
காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்க இலங்கை எடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஐநா ஒத்துழைக்கும் - ஐக்கிய...
10 மணிநேர மின் துண்டிப்பு - இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளிப்பு!