சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Wednesday, October 11th, 2017

இலங்கை வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் இதேகாலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.3 சதவீதமாக அதிகரித்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 077 ஆகும்;. இவ்வருடத்தில் இத்தொகை ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தில் கடந்த 9 மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 2.9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்து 51 ஆயிரத்து 931 ஆகும். கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் 15 இலட்சத்து 8 ஆயிரத்து 405 பேர் வருகைதந்துள்ளனர்.

பிரிட்டன், கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, உக்ரைன், தெற்காசியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: