சுற்றுலாத்துறை விரைவில் வழமைக்குத் திரும்பும் – சுற்றுலா அதிகார சபை!

Friday, July 12th, 2019

நாட்டின் சுற்றுலாத்துறை விரைவாக வழமைக்குத் திரும்பும் எனவும் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இவ்வாண்டு நாட்டுக்கு வருகை தருவரெனவும் சுற்றுலா அதிகார சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் உலக நாடுகள் தத்தமது நாட்டு மக்களுக்கு இலங்கைக்கு சுற்றுலா பயணம் செய்வது தொடர்பில் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்திருந்தமையால் இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை சடுதியாக குறைவடைந்தது.

இந்நிலையில் இலங்கை அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு நாட்டின் பாதுகாப்பை கொண்டுவந்திருந்தது.

அத்துடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆதரவு நடவடிக்கைகளின் உறுதுணையுடன் இந்த அடைவு எட்டப்படும் எனவும் குறித்த அதிகாரசபை  மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: