சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியாவில் “வீதி நிகழ்ச்சிகள்” – இன்றுமுதல் 30 ஆம் திகதிவரை முன்னெடுக்கவும் நடவடிக்கை!

Monday, September 26th, 2022

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன் இணைந்து இரு தரப்பு உறவுகளையும், கலாசாரத்தினை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறையினை மேம்படுத்த முடியும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்ச்சிகள் இன்று (26) முதல் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாவது நிகழ்ச்சி இன்று புதுடில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறுகின்றது.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் நடைபெறுவதுடன் செப்டம்பர் 30 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெறும். நிகழ்ச்சியுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடையும்.

இந்த நிகழ்ச்சி மூலம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இலங்கை பிரபலங்கள் சனத் ஜெயசூரியா மற்றும் யோஹானி டி சில்வா பங்கேற்க உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வுகள் மூலம் பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தையும் மற்றும் இலங்கையின் கலாசாரம் தொடர்பான கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நடனம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு வருகை - இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் மையம் - அமைச்சர் பிரசன்ன ர...
அடுத்த மாதம் இரண்டாம் மற்றும் 3ஆம் திகதிகளில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதி!