சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Thursday, February 3rd, 2022

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அடையாளம் காணப்பட்ட இடங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகள் மாவட்ட குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தரும்போது சுற்றுலா தலங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: