சுற்றுலாத்துறையின் மூலமும் இவ்வருடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறவேண்டும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆலோசனை!

இவ்வருடம் சுற்றுலாத் துறையின்மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட திட்டமிட்டு செயற்படுமாறு பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பாக அதன் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – சுற்றுலாத்துறையில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஏற்றுமதியின் மூலம் பெறுகின்ற வருமானம் மாத்திரம் போதுமானதல்ல, எனவே தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் சுட்டிக்காட்டியுள்ள பஷில் ராஜபக்ச கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இயல்பான நிலையில் பல நாடுகள் மீண்டும் தங்கள் நாடுகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|