சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுப்பதற்கு அந்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்..
அத்துடன் அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சூழலியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் இதற்காக பெறப்படவுள்ளன.
பல்வேறு காலப்பகுதியில் அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் மாற்றம்பெற்ற போதிலும், சுற்றாடல் பாதுகாப்பிற்கான கொள்கைத் திட்டங்கள் மாற்றப்படவில்லை என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்!
யாழ் பல்கலையில் மோதல்: மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
சபை முதல்வராக தினேஷ், ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க நியமனம்!
|
|