சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!

Saturday, March 6th, 2021

சுற்றாடல் தொடர்பில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு சில அமைச்சுக்கள் ஒன்றிணைந்து அமைச்சக்களுக்கிடையிலான இணைப்பு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.

இதனடிப்படையில் உள்ளக அமைச்சு இணைப்பு வேலைத்திட்டத்திற்காக சுற்றாடல் துறை அமைச்சு வன விழங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு நீர்வள அமைச்சு, வன ஜீவராசிகள் வன வள அமைச்சு ஆகியன  இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளன.

அத்துடன் குறித்த அமைச்சுக்களின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது முத்து ராஜவெல ஈரலிப்பு நிலத்தை பாதுகாத்தல்,அரசாங்கத்தினால் பெறுப்பேற்க்கப்பட்டுள்ள கிராமிய காணிகளை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்குதல் மற்றும் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்பவர்களை சட்டதின் முன் நிறுத்துவது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: