சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
Saturday, August 7th, 2021சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிப்பதற்கு எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சின் ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அதற்கமைய, பொலித்தீன் பை, பிளாஸ்டிக் கோப்பை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் இடியப்ப தட்டு உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முகக்கவசத்தை உரியவாறு அப்புறப்படுத்துவதற்கு தேவையான சுகாதார ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கான ஒழுங்கு விதி அடங்கிய ஆவணம், சுகாதார அமைச்சின் அனுமதியை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|