சுற்றறிக்கை வெளியிடப்பட்டால் சேவையில் ஈடுபடத் தயார் -பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்தகூட்டணி!

தமது சம்பளத்தை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியில் ஈடுபடத் தயார் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்தகூட்டணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் 40 நாட்களை எட்டியுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி உயர்கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய, 4ஆம் திகதி சேவைக்குத் திரும்ப இணக்கம் காணப்பட்டது.
எனினும், இன்றுவரை தமக்கு வழங்கப்பட்டஉறுதிமொழி தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை என்று எட்வர்ட் மல்வத்தகே சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பல்கலைக்கழக மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை - யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்!
நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செய்தி!
ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்று உத்...
|
|