சுரக்ஸா காப்புறுதிக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை!

Wednesday, January 9th, 2019

இந்த ஆண்டு முதல் “சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு 1,000 ரூபா முதல் 3,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முற்றாக ஊனமுற்ற நிலையை எதிர்நோக்க நேரிட்டால் அதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு 1 இலட்சம் ரூபாவில் இருந்து 2 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோர்களை இழக்கும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் கொடுப்பனவு 75,000 ரூபாவில் இருந்து 2 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: