சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Friday, March 1st, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியினை இவ்வருடம் நடைமுறைப்படுத்துவதினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கல்வியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமாந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடுகள் சில கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இறுதி அறிக்கையின் பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts: