சுய மதிப்பீட்டு மாநாடு – 2019 யாழ்ப்பாணத்தில்!

Friday, June 14th, 2019

பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் எனும் தொனிப்பொருளில் சுய மதிப்பீட்டு மாநாடானது இன்று (14) யாழ்ப்பாணத்தில் Tilko விடுதியில் உள்ள சோழோ மண்டபத்தில் நடைபெறுகின்றது.

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழுகின்ற பாதிக்கப்பட்டோர் அவர்களதுவாழ்க்கைப் பயணத்தில் சந்தித்தவையையும், சாதித்தவையையும் ஆராயும் நோக்கோடு பாதிக்கப்பட்டோரும்,பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரும் இணைந்து இந்த மாநாட்டை நாடாத்துகின்றார்கள். இந்த மாநாட்டினை யாழ்ப்பாணம் றொட்டறிக் கழகமும் – DATA அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

வடக்குகிழக்கைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பெற்றோரை இழந்தபிள்ளைகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பிள்ளைகளை இழந்த மூத்தோர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்புக்கள் இந்தமாநாட்டில் கருத்துக்களைபகிர இருக்கிறார்கள். அந்தவகையில் வடக்கிலிருந்து 42 அமைப்புக்களும், கிழக்கிலிருந்து 38 அமைப்புக்களும் இணைகின்றார்கள். இவர்களோடு யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்தமாநாட்டில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

இந்தமாநாட்டிற்கான நிகழ்வுகள் காலை 9 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும். அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு முதலாவதாக பாதிக்கப்பட்டோர் அமர்வுநடைபெறும். இதில் பாதிக்கப்பட்டோரில் பலதடைகளைதாண்டி சாதித்தவர்களில் ஒருசிலர் இந்த மாநாட்டில் கருத்துக்களை பகிர இருக்கிறார்கள். அவர்களில் மாற்றுத்திறனாளியாக இருந்து சாதித்தவர்கள்,பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் இருந்து சாதித்தவர்கள்,பெற்றோரை இழந்து சாதித்தவர்கள் அடங்குகின்றார்கள்.

Related posts:


அரிசி மீதான இறக்குமதி வரி குறைப்பு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களம் தெரிவிப்பு!
உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக விளங்குகின்றது தைப்பொங்கல் – வாழ்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்படுகிறது - கடற்படை ப...