சுயதொழில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் -அம்பலம் இரவீந்திரதாசன்

Tuesday, July 4th, 2017

வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டுமாயின்  சுயதொழில் சார்ந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேசநிர்வாகச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

யுத்தப் பாதிப்பிலிருந்துமக்கள் மீளவும் சொந்த இடங்களில் மீளக்குடியேறிவரும் நிலையில் மக்களுக்கானதேவைகள் யாவும் முற்றாகநிவர்த்திசெய்யப்படாதநிலையேகாணப்படுகின்றது.

மீளக்குடியமர்ந்தபகுதிகளில்; வாழும் மக்கள் தமதுவாழ்வாதாரத்தைமேம்படுத்தும் வகையில் சிறியமற்றும் நடுத்தரகைத்தொழிற்றுறைகளில் அதிகநாட்டம் காட்டவேண்டும்.

இவ்வாறுநாட்டம் காட்டும் பட்சத்திலேயே வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றங் காணச்செய்யமுடியுமென்றும் தெரிவித்தார்.

இதனடிப்படையில் இங்குள்ளமக்களது நிலைமைகளைநேரில் கண்டறியும் பொருட்டு இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அதேவேளை, மக்களது வாழ்வாதாரம் மட்டுமன்றி அவர்களை நிலையானபொருளாதார அபிவிருத்தியை நோக்கி முன்கொண்டுசெல்லும் பொருட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகாண்பதற்கு முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அரியாலைதென்கிழக்குபெரியதோட்டம்,மணியந்தோட்டம் பகுதிமக்களுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்றசந்திப்பின்போது இரவீந்திரதாசன் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.

Related posts: