சுயதொழில் வாய்ப்புகளூடாகவும் வளமான வாழ்வியலை உருவாக்கிக் கொள்ளமுடியும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Saturday, February 4th, 2017

எமது இளைஞர்கள் அரச வேலைவாய்ப்புகளை மட்டும் எதிர்பார்த்து காத்திராது சுயதொழில் வாய்ப்புகளில் அக்கறை செலுத்துவதனூடாகவும் தமது வாழ்வாதார நிலைமைகளை வெற்றிகாண முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

மண்டைதீவு பகுதியில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது இளைஞர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பிரதேசங்களிலுள்ள வளங்களை பயன்படுத்தி சுயதொழில்களை உருவாக்கி கொள்வார்களாயின் வாழ்வாதார தேவைகள் மட்டுமல்லாது பிரதேசத்தினது அபிவிருத்தியையும் வென்றெடுக்கமுடியும்.

சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொள்ள எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை மேற்கொண்டிருந்தார். தற்போதும் அவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுத்து வருகின்றார். எனவே உங்களது வாழ்வாதாரத்திற்கான சுயதொழில்  வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம்.

எதிர்வருங்காலங்களில் அதிகரித்த அரசியல் பலத்தை நீங்கள் எமக்க வழங்கவீர்களானால் உங்கள் வாழ்வாதாரம் மட்டுமல்ல அரசியல் உரிமையையும் நாம் வென்று தருவோம் என்றார்.

இச்சந்திப்பின் போபோது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர்  ஞானமூர்த்தி (யசோ) மற்றும் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

1

Related posts: