சுயதொழில் செய்வதற்கான உதவிகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மீசாலை தெற்கு  மதுவன் சனசமூக நிலைய மக்கள் கோரிக்கை!

Tuesday, December 13th, 2016

மிகவும் வறிய நிலையில் வாழும் தமது பகுதி பெண்களது வாழ்வியலை மேம்படுத்த வாழ்வாதார உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மீசாலை தெற்கு  மதுவன் சனசமூக நிலைய பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீசாலை தெற்கு  மதுவன் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேச முக்கியஸ்தர்களான அமீன் மற்றும் திருக்குமரன் ஆகியோரிடமே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் – நீண்டகாலமாக தமது பகுதியில் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் காத்திருப்பதாகவும் சில உதவித்திட்டங்கள் கடந்தகாலத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தமது பகுதிக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னரான காலப்பகுதியில் தமது பகுதிக்கு தேவையான எந்தவொரு உதவித்திட்டங்களும் கிடைக்கப்பெறவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்த குறித்த பகுதி மக்கள் தமது பகுதியிலுள்ள மாதர் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களது வாழ்வாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு சுயதொழில் வாய்ப்பு உதவிகளை பெற்றுத்தருமாறும் படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட  பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்

மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த பிரச்சினைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

2

Related posts: