சுயதொழில் செய்வதற்கான உதவிகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை முள்ளி மக்கள் கோரிக்கை!

அரியாலை மத்தி முள்ளி பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான உதவிகளை பெற்றுத்தரமாறு தருமாறு ஈழ மக்கள் ஜநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியாலை இசை சனசமூக நிலைய முன்றலில் தலைவர் யோகசீலன் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற குறித்த பகுதி மக்களது ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் நல்லூர்தொகுதி நிர்வாகச் செயலாளரும் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த கோரிக்கையை விடுத்தள்ளனர்.
வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் குறித்தபகுதி மக்கள் தமது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக தமக்கு தும்பு உற்பத்தி மற்றும்; மிக்சர் தயாரிப்பு போன்ற தொழில்களை மேற்கொள்வதற்கு முதலீட்டுப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான நிதி உதவியை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்த அப்பகுதி மக்கள் தமது பகுதியின் வறுமை நிலைமைகளை கருத்திற்கொண்டு தீர்வுகளை விரைவாக பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மக்களது கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் ஆராய்ந்தறிந்துகொண்ட அம்பலம் ரவிந்திரதாசன் குறித்த பகுதி பிரச்சினைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தாமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது கட்சியின் நிர்வாக உறுப்பினர் யாழினி உடனிருந்தார்.
Related posts:
|
|