சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளைய தினத்தன்று ஓய்வு – வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர அறிவிப்பு!

Friday, December 30th, 2022

நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் (31.12.2022) நாளை சனிக்கிழமையுடன் ஓய்வு பெற்று செல்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் ஒரே தடவையில் இந்தளவு பெருமளவிலான அரச ஊழியர் ஓய்வு பெற்று செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரச ஊழியர் ஓய்வு பெறும் வயதெல்லையை கடந்த அரசாங்கம் 65 என அறிவித்த போதும் தற்போதைய அரசாங்கம் அந்த வயதெல்லையை 60 ஆக குறைத்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: