சுமத்ராவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் மேலும் அச்சுறுத்தலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில உள்ள பந்தஅஸே தீவில் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழ பேராசிரியர் ஜொனத்தன் பவ்னல் உட்பட பல தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்தத்தீவு கடல் மட்டத்தில் இருந்து 7கிலோ மீற்றர் ஆழத்தில் அமைந்துள்ளது. சுமத்ரா கடலினுள் நூற்றுக்கணக்கான நிலப் பிளவுகள் காணப்படுகின்றன என்று லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். தற்போதைய நிலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் நிலநடுக்கத்துடனான சுனாமி ஒன்று ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். எப்படியிலுப்பினம் நிலநடுக்கம் மற்றும் பெரியளவில் சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் முழுமையான எச்சரிக்கையை விடுக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|