சுப்பர் மூனினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

68 வருடங்களுக்கு பின்னர் உலகளாவிய ரீதியில் சுப்பர் மூனை பார்க்கும் வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் கிடைத்தது.
இந்த சுப்பர் மூனை இலங்கையர்களுக்கும் காண முடிந்தது. இந்த நிலையில் இந்த சுப்பர் மூனினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் பிரபல சோதிடர் எஸ்.ஜே.சமரகோண் சில ஆரூடங்களை வெளியிட்டுள்ளார்.
பூமியில் காணப்படுகின்ற காலநிலையை போன்றே தட்ப வெட்ப நிலைமைகள் தலைகீழாக மாற்றுவதற்கு சந்திரனின் சக்தி மேலும் உதவுகின்றது.
கடல் கொந்தளிப்பு, அதிக மழை, சுனாமி நிலைமை உட்பட ஏற்படுவது இந்த சந்திரனின் சக்தியிலாகும். சந்திரன் வலுவடைதல் போன்றே பூமிக்கு அருகில் பயணிப்பது நன்மை மற்றும் தீமைக்கு காரணமாகின்றது.
சந்திரன் பலவீனமாக காணப்படுபவர்களின் சந்திரன் வலுவடையும் போது மனநோய் தாக்கம் போன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்கும் செல்வார்கள்.
அதேபோன்று தற்கொலை செய்துக் கொள்வதற்கு உட்பட சந்திரனின் ஆதிக்கம் காணப்படும். தட்பட வெப்ப நிலை ரீதியில் கடல் கொந்தளிப்பு, அதிக மழை, கடுமையான காற்று சுனாமி நிலை போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
நவம்பர் மாதம் 14ஆம் திகதி சந்திரன் பூமிக்கு அருகில் பயணித்ததன் ஊடாக சுப்பர் மூனை பல நாட்டை சேர்ந்தவர்களுக்கு காண முடிந்தன. சந்திரன் பயணித்த நேரத்திற்கமைய இந்த சம்பவம் உலக மக்களுக்கு அவ்வளவு நன்மையானதாக அமையாது.
அதற்கமைய 24 ஆம் திகதிக்கு பின்னர் மனநல பாதிப்பு அதிகரிப்பு மற்றும் அறிவுஜீவிகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினையின் காரணமாக தற்கொலை அதிகாரிக்கும் காலமாக மாற்றமடையும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. அரசியலுக்குள் கொந்தளிப்பான நிலைமை ஒன்று ஏற்படும்.
டிசம்பர் மாதம் இறுதி மற்றும் ஜனவரி மாதம் ஆரம்பத்தில் சுறாவளி, கடல் கொந்தளிப்பு, சுனாமி நிலை உட்பட ஏற்பட காரணமாகும்.
அதிக மழை காரணமாக மண்சரிவுகள் ஏற்படுவதோடு, ஏனைய காலங்களை விடவும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே எதிர்வரும் மாதங்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|