“”சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கைத் திட்டம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்மொழிவுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு!

Friday, December 17th, 2021

ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைய “சமுர்த்தி சௌபாக்கிய நிகழ்வு” யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் நடைபெற்றுவருகின்றன.

இதற்கயை யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் தோறுமுள்ள பிரதேச சமுர்த்தி முகாமையாளகள் தலைமையில் சமுர்த்தி பயனாளிக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நெற்றையதினம் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட வீடு ஒன்று பயனாளிக்கு  கையளிக்கும் நிகழ்வு தொண்டமனாறு தெற்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதியாக வல்வை நகரசபை உறுப்பினர் திருமதி இந்திரன் கைலாஜினி கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

இதனிடையே சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வழக்கம்பரை சமுர்த்தி வங்கியில் பல்லசுட்டி சிறுவர் கழகத்திற்கு விளையாட்டு பொருட்களும் மற்றும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் வலிகாமம் மேற்கு பிரதேச ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகத்தினரால் மின் இணைப்பு பெற்றுக்கொள்ள முடியாதிருந்த J/174 காட்டுப்புலம் பிரதேசத்தில் இரண்டு குடும்பங்களுக்கு மின் இணைப்பு பெற்றுக் கொடுத்க்கப்பட்டதுடன் வட்டு கிழக்கு சித்தங்கேணி J/157 இரண்டு குடும்பங்களுக்கும் வட்டு மேற்குJ/ 167 முதலி கோவிலடியில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கும்  புனரமைக்கப்படாதிருந்த வீடுகளும் திருத்திகொடுக்கப்பட்டது.

இவ் நிகழ்வுகளில் குறித்த பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளர் செல்வக்குமார்’ கலந்துகொண்டு பயனாளிகளிடம் துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: