‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021

‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வேலைத்திட்டத்தின் இறுதி வாரம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், நாடு பூராகவும் 570 உற்பத்திக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனூடாக இரண்டு இலட்சத்து 20 ஆயிரம் குடும்பத்தினர் சுயதொழில் முயற்சியாளர்களாக தேசிய பொருளாதாரத்தில் பங்காற்றுகிறார்கள்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மக்களின் மனைப் பொருளாதாரம் வலுப்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: