சுபகிருது ஆண்டு முடிவடைந்து சோபகிருது ஆண்டு பிறந்தது – அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Friday, April 14th, 2023இன்று பிறந்துள்ள தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை மக்கள் ஆர்வத்துடன் வரவேற்று கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதற்கமைய சித்திரைப் புத்தாண்டு, சோபகிருது என்ற பெயரைக் கொண்டு, இன்றையதினம் மலர்ந்துள்ளது.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, இன்று பிற்பகல் 2 மணி 3 நிமிடத்திலும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று பிற்பகல் 2 மணி 59 நிமிடத்திலும், சோபகிருது வருடம் பிறந்துள்ளது.
அதனடிப்படையில் ஈ.பி.டி.பி இணையத்தளம் தனது வாசகர்களுக்கும், டிடி தொலைக்காட்சி தனது நேயர்கள் அனைவருக்கும் சோபகிருது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றன.
ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் நாள் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
முக்கிய பண்டிகை நாட்களில் ஒன்றான இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் சூரிய பகவான் முதல் ராசியான மேஷத்தில் பெயர்ச்சியாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகின்றது.
60 ஆண்டுகளை கொண்ட தமிழ் வருட சுழற்சிப்பாதையில் தற்போது சுபகிருது ஆண்டு நேற்றுடன் முடிவடைந்து இன்று சித்திரை மாதம் முதல் திகதியில் இருந்து சோபகிருது ஆண்டு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|