சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் ஜதுர்சாயன் அகில இலங்கையில்  சாதனை!

Sunday, January 8th, 2017

யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கடந்த-2016 ஆம் ஆண்டு  க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவனான க.ஜதுர்சாயன் அகில இலங்கை ரீதீயில் இயந்திரவியல் தொழில்நுட்பப்  பிரிவில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதாயக் கல்லூரியில் முதன்முறையாகக் கடந்த-2016 ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியில் தொழில்நுட்பத் துறைக்குத் தோற்றிய மாணவனே இவ்வாறான சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

முதன்முறையாகத் தொழில்நுட்பப் பிரிவிற்கு இந்தக் கல்லூரியிலிருந்து க.பொ.த உயர்தரத்திற்குத் தோற்றிய நிலையில் இயந்திரவியல் தொழில்நுட்பப் பிரிவில் தோற்றிய மாணவர்கள் அனைவரும் நூறு வீதச் சித்தியைப் பெற்றுள்ளனர்.

சாதனை மாணவன் க.ஜதுர்சாயன் கருத்துத் தெரிவிக்கையில்,

கல்லூரி அதிபருக்கும், எனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் இந்த வேளையில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எங்கள் பாடசாலையில் தொழில்நுட்பப் பிரிவிற்கு ஆசிரியர்கள் இல்லாத போதும் வெளிவாரியான ஆசிரியர்களைக் கொண்டு எமது அதிபர் எமக்குக் கல்வி போதித்தார். இதற்குக் கனடா பழைய மாணவர் சங்கமும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. நான் அகிலஇலங்கை ரீதியில் முதலிடம் பெற வேண்டுமென்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். அந்த ஆர்வம் தற்போது நிறைவேறியதில் பெரு மகிழ்ச்சி. என் கல்விக்கு அம்மா, அப்பா மற்றும் சகோதரர்கள் உதவியிருக்கிறார்கள்.எதிர்காலத்தில் மின்னணுத் தொழில் நுட்பவியலாளராக உருவாக வேண்டுமென்பதே என் ஆசை என்றார்.

unnamed (2)

Related posts: