சுன்னாகம் லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

Tuesday, September 20th, 2016

சுன்னாகத்தில் அமைந்துள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐந்து வருட கால டிப்ளொமா கற்கைநெறியைத் தாம் தொடர்கின்ற போதிலும், தமக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.கடந்த 46 நாட்களாக வகுப்புப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவந்த லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கல்லூரியில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டினர்.அத்துடன், தமது பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கமளிக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதுடன், சுன்னாகம் அனல் மின் நிலையத்தை ஒட்டியதாக கல்லூரி அமைந்துள்ளதால், மூலிகைச் செடிகளைப் பயிரிட முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

lanka

Related posts:

பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் - பிரதமர் மஹிந்த...
முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தயங்க வேண்டாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் ...
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை...