சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

Thursday, June 1st, 2017

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் எந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்புபட்டுள்ளதோ அந்த மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்றைய தினம் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள 2 கிலோமீற்றர் தூரத்திற்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  அதேபோன்று நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் மற்றும் ஒயில் கழிவுகளானது வடக்கு திசையை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் தாம் பாதிக்கப்பட்டதாக அப் பகுதியில் உள்ள மக்கள் சந்தேகித்தால் அது தொடர்பாக சுற்று சூழல் அதிகார சபைக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.  அவ்வாறு பொதுமக்களால் தெரிவிக்கப்படும் முறைப்பாட்டை சுற்றுச் சூழல் அதிகார சபையானது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து பொதுச் சுகாதர வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் பரிசிலித்து அது தொடர்பில் அம்மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மேலும் சுன்னாகம் பிரதேசத்தில் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், இதில் எந்த மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து கிறீஸ் மற்றும் ஒயில் கழிவுகள் வெளிவருகின்றன என சுற்று சூழல் அதிகாரசபை ஆய்வு செய்து வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடாக அந்நிறுவன அதிகாரியை கைது செய்து அடுத்த வழக்கு தவணையின் போது மன்றில் முற்படுத்த வேண்டும்.  இவ்வாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவிட்டதுடன் இவ் வழக்கை எதிர்வரும் மாதம் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

Related posts:


பாடசாலை நேர மாற்றத்தால் ஆசிரியர்களுக்கு பாதிப்பே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்...
ட்ரோன் உள்ளிட்ட விமானியில்லா கருவிகளை பறக்க விடத் தடை - சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை!
சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையே, அவசரமற்ற பொருட்களுக...